இலங்கை ஆசிய உற்பத்தித் திறன் நிறுவனத்தில் அங்கத்துவத்தைப் பெற்றதன் பின்னர், 1960 ஆம் ஆண்டில் இலங்கையில் உற்பத்தித் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. அத்தருணத்தில் இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்த கௌரவ டட்லி சேனநாய அவர்கள் இலங்கை அரசு சார்பாக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருந்தார்.ஆசிய உற்பத்தித் திறன் நிறுவனத்தின் அங்கத்தவராக இருந்து கொண்டு 1968 ஆம் ஆண்டு கைத்தொழில் அமைச்சின் கீழ் முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் உற்பத்தித் திறன் நிலையத்தினை இலங்கை தாபித்தது. நாடு பூராவும் உற்பத்தித் திறன் அறிவினைப் பரப்புவதற்கு மேற்கூறப்பபட்ட முகாமைத்துவ அபிவிருத்தி உற்பத்தித் திறன் அலகு என்பது தேசிய முகாமைத்துவ நிறுவகமாக மாற்றப்பட்டது.பின்னர் தேசிய முகாமைத்துவ நிறுவகமானது, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனமாக மறுசீரமைக்கப்பட்டது. தேசிய வர்த்தக முகாமைத்துவத்தின் நோக்கெல்லையானது, சந்தைப்படுத்தல், தகவல் தொழில்நுட்பம் ஏனையவை போன்ற அத்தகைய வேறுபட்ட துறைகளுக்கு விரிவாக்கப்பட்டது...









